In Perambalur, an awareness rally on child marriage and anti-women violence

குழந்தை திருமணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெரம்பலூரில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் சார்பில் குழந்தை திருமணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை பகுதியில் புறப்பட்ட இப்பேரணியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, காவல்துறை கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன், கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் ஆயிரத்து 300க்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, கோஷம் எழுப்பியவரே பேரணியாக சென்றனர்.

பெரம்பலூர் பாலைக்கரையில் தொடங்கிய இப்பேரணி வெங்கடேசபுரம், ரோவர் ஆர்ச், சங்குபேட்டை, கடைவீதி வழியாக பழைய நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேரணிக்கு முன்னதாக கல்லூரி மைதானத்தில் குழந்தை திருமணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தஉரிமைக்குரல் வடிவில் ஆயிரத்து 300க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் கை தூக்கி அணிவகுத்து நின்று தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!