In Perambalur, another policeman who tried to rape the policeman’s wife was jailed!
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தலில் ஆயுதப்படையில் போலீசாருக்கு அடுக்குமாடி குடியிப்பு உள்ளது. அங்கு போலீஸ் ஒருவரின் மனைவி ஒருவர் நேற்று முன் தினம் இரவு வீட்டு வாசலில் நின்றுக் கொண்டு போன் பேசிக் கொண்டிருந்தார். போலீசாக இருக்கும் பிரபாகரனும் அக்குடியிருப்பில் வசித்து வந்த அவர், போதையில் போன் பேசிக் கொண்டு இருந்த அந்த பெண்ணை வாயை பொத்தி, மொட்டை மாடிக்கு தவறான நோக்கத்தில் தூக்கி சென்றார். பிரபாகரனை தள்ளிவிட்டு தப்பி வந்த அந்த பெண் தனது கணவரிடம் இது குறித்து தெரிவித்தார்.
பின்னர், இது தொடர்பாக இந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், பிரபாகரன் மீது, 354,354(A),509 IPC & 4 Of TNPHW Ac பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் போலீசான பிரபாகரனை பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக போலீசாரின் மனைவிக்கே போலீஸ் குடியிருப்பில் பாதுகாப்பு இல்லை. இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற கருப்பு ஆடுகளால் நல்ல போலீசாருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது.