In Perambalur, because the bus which was filled with diesel was late to pick it up, the lawyer tried to start the bus and started the bus!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு மேல், தனியார் பஸ் ஒன்று வழக்கம் போல், ஆத்தூருக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பஸ்சுக்கு டீசல் டிரைவர் கண்டக்டர் நிரப்பி கொண்டு இருந்தனர். இதில், சற்று நேரம் தாமதமாகிக் கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த வக்கீல் மற்றும் அவரது நண்பர் போதையில் இருந்தனர்.
பேருந்து தாமதமாவது கண்டு எரிச்சல் அடைந்தவர்கள், டிரைவர் சீட்டில் உட்கார்ந்து பேருந்தை ஸ்டார்ட் செய்து ஓட்ட முயன்றார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் சத்தமிட்டனர். உடனடியாக கீழே இருந்த டிரைவர் கண்டக்டர் இருவரும் ஓடி வந்து, வக்கீலிடம் இது சரியில்லை என்று கேட்ட போது, மது போதையில் இருந்த வக்கீல் தனது நண்பர்களுடன் தகாத வார்த்தைகளால் டிரைவர் கண்டக்டர் இருவரையும் திட்டினார். பேருந்து புறப்பட்டு கோனேரி பாளையம் புறவழிச் சாலை அருகே வந்தபோது அவர்களுடைய வசைகளை தாங்க முடியாத பயணிகள், அங்கிருந்த ஹைவே பேட்ரோல் போலீசாரிடம் நடந்தவற்றை எடுத்து கூறி, வக்கீல் மற்றும் அவரது நண்பரை இறக்கிட கோரினர். அங்கிருந்த போலீசார் வழக்கறிஞரையும், பயணிகளையும் டிரைவர் கண்டரையும், சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் இரவு நேரத்தில் பயணம் செய்த பயணிகளிடையே எரிச்சலை உண்டாக்கியது.