In Perambalur cause of the accident at the request of the public, who want to reform the broken floor bride
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூர் ஊராட்சி மன்றம் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரைபாலம் கட்டப்பட்டது.
இந்த தரைபாலத்தின் ஒரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மீட்டர் சுற்றளவிற்கு உடைந்து ஓட்டை ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தான பாலத்தை காலையிலும், மாலையிலும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கடந்து செல்கிறார்கள்.
நடந்து செல்லும்போது கால் தவறி உடைந்த பாலத்தினுள் சென்றால் எழும்பு முறிவு ஏற்படும் நிலை உள்ளது. இந்த பாலத்தின் வழியாக இரவு நேரத்தில் சென்ற பலர் ஓட்டை இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து காயமடைந்து உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளி மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் உடைந்து ஆபத்தான நிலையிலுள்ள பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.