In Perambalur, charitable organizations are throwing the Condom given to the government people in the garbage!

அரசு மக்களின் நலன் கருதி, பால்வினை நோய்களை தடுக்கவும், பெண்கள் அடிக்கடி கர்ப்பமாவதை தடுக்கவும், இல்லற இன்பம் தடையில்லாமல் பெறவும், அரசுகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் வினியோகம் செய்ய காண்டங்களை (நிரோத்தை) விலையில்லாமல் வழங்குகிறது. ஆனால், அது கடைக்கோடி சென்று சேராமல், சில தொண்டு நிறுவனங்கள் மூட்டை மூட்டையாக வைத்திருந்து கடைசியில், காலாவதி ஆன பின்னர், அதை குப்பையில் வீசி செல்கின்றனர்.

இதனால், அரசு அதற்காக ஒதுக்கும் தொகையில், லட்சக்கணக்கான பணம் வீணாகிறது. அதோடு மட்டுமில்லாமல் அந்த திட்டமும் தொய்வடைந்து விடுகிறது. ஆர்வமில்லாத தொண்டு நிறுவனங்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காண்டங்களை வாங்கி, வினியோகம் செய்யாமல் குப்பையில் வீசி செல்லவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இதே போல பெண்களுக்கு வழங்கப்படும் சானிடரி நாப்கின் பேடுகளும், குப்பையில் வீசப்படுகிறது. அல்லது வேண்டப்பட்டவர்களுக்கு பண்டல் பண்டலாக வழங்கப்படுகிறது. எனவே, அரசு, தன் திட்டம், கடைக்கோடி சென்று உரியவர்களுக்கு பலனிக்கிறதா என அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இதனால், மக்களின் வரிப்பணம் பாழாகி குப்பைக்கு போவது தடுக்கப்படும்.

அதிகாரிகள் கலெக்சனில், காட்டும் அக்கறையை கண்காணிப்பிலும் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!