In Perambalur Collector’s Office to protest the relentless siege of the period setting rations store
பெரம்பலூர் அருகே கிராம மக்களுக்கு ரேசன் கடை அமைத்து கொடுப்பதில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மக்கள், அப்பகுதி வழியே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று வருவதால் ரேசன் பொருட்களை வாங்கி கொண்டு சாலையைக் கடக்கும் போது, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். மேலும், 3 வாகனம் மோதி விபத்துக்குள்ளளானதில், 3 பேர் இறந்து உள்ளனர் என்றும், அதனால், கடந்த 3 ஆண்டுகளாக ரேசன் கடை கேட்டு போராடி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரேசன் அமைப்பததற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கடைக்கான இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து காலம் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, காலதாமதின்றி உடனே ரேசன் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 350க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பெரும் திராளாக திரண்டு வந்து அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர், அங்கிருந்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.