In Perambalur collector’s office to set up a public demanded ATM mechine
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கினைந்த நீதிமன்றங்கள், மாவட்ட காவல் அலுவலகம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைந்துள்ளது.
நாள்தோறும் கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் இப்பகுதியை சுற்றி குடியிருப்பு பகுதிகளும், அதிகத்து வருகின்றன. காலியாக உள்ள வீடுகளில் கல்லூரி மாணவர்கள், வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
திடீர் பணத் தேவைக்கு பணம் எடுக்க அருகில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மிற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. வாகனங்களில் வருவோர்க்கு எந்த வித பிரச்சனையும் இல்லை, ஆனால் பாதாசாரிகளாக நடந்து வருவோர்கள் நடந்து சிரமப்படுகின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏ.டி.எம் அமைத்தால் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் சிரமம் இன்றி அங்கேயே பணம் எடுத்து கொள்வார்கள்.
இதே போல் கேஷ் டெபாசிட் எந்திரமும் அமைத்தால் வங்கியில் பணம் செலுத்த நீண்ட சென்று வரத் தேவை இருக்காது. இதனால் அனைத்து தரப்பினருக்கும், பயண நேரம், எரிபொருள் சிக்கனம் என மிச்சமாகும் என தெரிவிக்கின்றனர்.