In Perambalur, cotton auction sale will be held on EveryTuesday: Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள மற்றொரு தகவல்.
பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவை இணைந்து இன்று (22.01.2019) முதல் ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் பருத்தி ஏலத்தை நடத்த உள்ளன.
இந்த பருத்தி ஏல விற்பனை வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்ட பருத்தி விவசாயிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்யும் பருத்தியினை மேற் காண் சங்கத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.