In Perambalur: cow fell into the well: Firefighters rescued alive
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயனைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது பசுமாடு இன்று மாலை தனது நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.அப்போது
மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாரத விதமாக அருகில் உள்ள தங்கவேல் என்பவர் விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்க தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் நிலைய அலுவலர் சதாசிவம்(பொ) தலைமையிலான தீயனைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு பத்திரமாக கரை சேர்த்தனர். விவசாயி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.