In Perambalur declared invalid, notes central government condemning human chain protest on behalf of DMK

dmk_flag ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த மத்திய அரசை் கண்டித்து பெரம்பலூரில் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

பிரதமர் மோடி, கடந்த 8ஆம் தேதி ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக எதிர்கட்சியான திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்க, உடனடியாக மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

பெரம்பலூரில், காமராஜர் வளைவு பகுதியில் இருந்து கிருஷ்ணா திரையரங்கம் எதிர் வரை மாவட்ட திமுக சார்பில் சுமார் 1 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் நகர செயலாளர் ம.பிரபாகரன், முன்னாள் ஏழாவது வார்டு கவுன்சிலர் கி.கனகராஜ் உள்பட கட்சியின் முக்கிய பிரதிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!