In Perambalur, Dhanalakshmi Srinivasan opened “Kothukari”, a traditional high-quality vegetarian and non-vegetarian restaurant.

பெரம்பலூர் பாலக்ரை – கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள என்.ஹெச் ரெசிடென்சியில் புதிதாக லக்சனா கிச்சனின் “கொத்துக்கறி ” உயர்தர சைவ – அசைவ குடும்ப உணவகம் இன்று காலை 10 மணி அளவில் திறப்பு விழா நடந்தது. ஹோட்டலில், பாராம்பரிய மிக்க கைமணம் மாறாத சுவையில சைவ -அசைவ உணவு பிரியர்களுக்காக விஷேசமாக தயாரிக்கப்பட்டு, சுகாதாரத்துடன் பரிமாறப்பட உள்ளது. மேலும், வாகன நிறுத்தும் பார்க்கிங் வசதியுடன், என்.ஹெச் ரெசிடெண்சியில் தங்கும் அறைகளும், ரெஸ்ட் ரூம்களும் வசதிகளும் கொண்ட இதன் திறப்பு விழா அனிஷா ரிசி தலைமையில் இன்று காலை நடந்தது. உரிமையாளர் ரிஷி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தனலட்சுமிசீனிவாசன் நிறுவனத் தலைவர் அ.சீனிவாசன், தந்தை ரோவர் கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.வரதராஜன், ஸ்ரீராமக்கிருஷ்ண கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.சிவசுப்பிரமணியன் மற்றும் பெரம்பலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.கென்னடி, தனலட்சுமிசீனிவாசன் குழுமங்களின் செயலர் நீல்ராஜ், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலர் விவேகானந்தன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள், பொதுமக்கள் பல்வேறு ஆதரவு நிறுவனங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தனலட்சுமிசீனிவாசன் குழுமங்களின் நிறுவன தலைவர் அ.சீனீவாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.வரதராஜன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் எம். சிவசுப்பிரமணியன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். ஆர்டர்களுக்கு 9551133369, மற்றும் 948985966 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உரிமையாளர் ரவி செய்திருந்தார். கொத்துக்கறி குடும்பத்தை சேர்ந்த வர்ஹூஸ், பிளசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உரிமையாளர் விஜய் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!