In Perambalur district, 73 people have already been affected and 33 more have been affected by Corona Virus

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 3,308 நபர்களுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் 4 வயது சிறுவன், சிறுமி, ஒரு தலைமை காவலர், ஒரு தீயணைப்பு வீரர், இரண்டு கர்ப்பிணிப் பெண்கள், ஒரு கல்லூரி மாணவர் மற்றும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் 50 பேர் உட்பட 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது (நேற்று முன்தினம் வரை) உறுதி செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5 பேர் மட்டும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டவர்களில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத¬னையடுத்து வைரஸ் தொற்றுள்ள 33 பேரும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73லிருந்து 106 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னை கோயம்பேடு தொடர்புடையவர்கள் 83 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள ஆய்வில் மீதமுள்ள 300 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 260க்கும் மேற்ப்பட்டவர்களில் வைரஸ் தொற்று இருப்பவர்களை தவிர மற்ற அனைவரும் வீடு திரும்பிய நிலையில், ஆய்வு முடிவுகள் வராத 22 நபர்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!