In Perambalur district adi-velli special worship: temples, thousands of women in wishes

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு : ஆயிரக்கணக்கில் பெண்கள் கோயில்களில் தரிசனம்:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிப்பாடுகள் செய்யப்பட்டு வெகுவிமரிசையாக பூஜைகள் நடத்தப்பட்டது.

adi-velli-siruvachoor-madurakali-temple

பெரம்பலூரை அருகே உள்ள சிறுவாச்சூரில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

பெரம்பலூரை அருகே உள்ள சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற மதுரகாளிஅம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

500 லிட்டர் பாலைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடத்தப்பட்டது. பிறகு அம்பாளுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபஆராதனை நடந்தது. அபிசேக நிகழ்ச்சியிலும் மதியம் நடந்த உச்சிகாலபூஜையிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தந்து மாவிளக்கு வழிபாடும், நேர்த்திக் கடன் வழிபாடும் நடத்தினர். சென்னை ஞானாம்பிகா குழுவினர் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மேலும், வழக்கமாக கோவில் திட்டப்படி அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.

ஆடிவெள்ளி சிறப்பு பூஜை ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செந்தில்குமார், கோவில் நிர்வாகஅதிகாரி ஜெயதேவி மேற்பார்வையில் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஆக.2-ந்தேதி ஆடிஅமாவாசையும், ஆடிபதினெட்டுவிழாவும் ஒரேநாளில் வருவதால், அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஆடிவெள்ளியை முன்னிட்டு பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு அபிசேக ஆராதனைகள் நடந்தது. மாரியம்மன்கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!