In Perambalur district AIADMK, the parties petition to contest the local elections!
பெரம்பலூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் தலைமை வகித்து அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் போட்டியிடுவோர்களிடமிருந்து விருப்ப மனுவினை பெற்றார்.
இதில் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.2.500ம், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ. ஆயிரத்து 500ம் கட்டணமாக செலுத்தி கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்ப படிங்களை பூர்த்தி செய்து அளித்தனர். வரும் 29ம்தேதி வரை விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியின்போது முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட மாணவரணி செயலாளருமான தமிழ்ச்செல்வன், மாநில மீனரவணி இணை செயலாளர் தேவராஜன், மாவட்ட நிர்வாகிகள் ராணி, லெட்சுமி, ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வக்குமார், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வராஜ், விவசாய பிரிவு லாடபுரம் த.கருணாநதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.