In Perambalur district efforts to increase proselytizing

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதமாற்றம் செய்யும் முயற்சிகள் அதிகரித்து வருகிறது. அதனை குடியுரிமை அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டு வருகின்றனர்.

இந்திய நாடு ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு சட்டத்தின படியே ஆட்சி நடக்க வேண்டும் தவிர மதத்தின் படி ஆட்சி கிடையாது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதன் மூலம் மக்களே! மக்களால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்து சட்டத்தின்படி ஆட்சி நடத்திக் கொள்வதாகும்.

ஆனால், தற்போது உலகம் முழுவதும் மோசமான மதவெறிகளால் ஆங்காங்கே மதவாதிகள் உண்டாகி போர் நடத்தி மக்களை குண்டுகள் வீசி கொல்லும் அளவிற்கு தீவிரவாதிகளாக மாறி மதவெறி பிடித்து கொடும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகினறனர்.

உலகம் முழுக்க மதத்தின் கீழ் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என போட்டி போட்டுக்கொண்டு மதவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சட்ட விரோதமாக பணம் அனுப்பி தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் மதமாற்றம் செய்யும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன.

ஜனநாயக ரீதியாக தேர்தலில் போட்டியிடுவதை விட வெகுஜன மக்களை மதத்திற்கு மாற்றிவிட்டால் அவர்களின் கணிசமான வாக்கு பெற்று மதத்தின் ஆட்சியை கொண்டு வந்து விடலாம் என சில மதங்கள் தீர்மானித்து விட்டன.

மதமாற்றம் என்பது நேற்று தோன்றியது அல்ல. இரண்டாவதாக ஒரு மதம் ஒன்று பூமியில் என்று தோன்றியதோ அன்றே மதமாற்றமும் நிகழ தொடங்கிவிட்டது !

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் இயற்றப்பட்டாலும், அது செயல்பாட்டில் தொய்வு உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், பதுங்கி இருந்த மதவாதிகள் மீண்டும் தங்களது ரூபத்தை காட்டத் தொடங்கிவிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியாக அல்லது கும்பலாக இருக்கும் குடும்ப பெண்களிடம் சென்று சிறு துண்டு சீட்டு கொடுத்து 4 கேள்விகளுக்கு பதில் அளிக்கிறோம் பேச்சை துவங்கும் அவர்கள்

இறந்த உறவினர்களுடன் பேச வைப்பதாகவும், பில்லி, சூனியம் போன்றவற்றை விரட்டியடிப்பதாகவும், குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை வரம் பெற்றுத் தருவதாகவும், குறிப்பிட்ட மத கடவுளை வழிபாடு செய்தால் சகல கஷ்டங்களும் தீரும் என்றும் பொருளாதார பிரச்சனை தீர்த்து தருவதாகவும், தீராத நோய்களான நீரழிவு நோய், எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை மருந்து இல்லாமல் குணமாக்குவதாகவும் கூறி வருகின்றனர்.

அப்பாவி மக்களின் அறியாமையையும், வறுமையையும் பயன்படுத்தி அமைதியாய், இனிமையாக ஆசை வார்த்தைகளை கூறி மதமாற்றம் செய்யும் முயற்சிகள் செய்வது இனஅழிப்பு போன்ற சட்ட விரோத செயலாகும்.

இது போன்று மதமாற்றம் செய்வதால் மதமாறுபவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தை விட, மதம் மாற்றுபவர்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும், சிலர் காதல் எனற போர்வையில் இளைஞர்களை மதமாற்றம் செய்து வருகின்றனர். இதற்கும் ஒரு படி மேலாக வழிபாட்டு தலங்களிலேயே தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மூலம் அந்த மதத்தை சேர்ந்த மக்களிடம் மதக்குருக்கள், பிற மத மக்களிடம் அன்பாக பழகி அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தும், அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டும், அவர்களின் தேவைகளை நிறைவு செய்து தக்க தருணத்தில் மதம் மாற்றம் செய்யும் படியே ஆலோசனைகள் வழங்குகின்றனர். இது சட்டத்திற்கு விரோதமானது மட்டுமில்லாமல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகும்.

வருவாய், காவல் துறையினரிடம் எவ்வித முறையான அனுமதி பெறமலேயே வீதிக்கு வீதி சென்று வீடுகளில் உள்ள குடும்ப பெண்களிடம் மத மாற்றம் செய்வது கண்டிக்கதக்கது மட்டுமல்லாமல் தடுக்க வேண்டியதும் கூட.

வழிபாட்டு உரிமை, சமய உரிமை, சமத்துவ உரிமை, வாக்குரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது அனைத்தும் அவரவர் தனிநபர் விருப்பத்திற்கு உட்பட்டது. அதனை காக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்த பெண்ணின் சடலத்தை வைத்து பூஜை நடத்திய மந்திரவாதி கைதானது நினைவிருக்கலாம்.

அறிவியலுக்கு அப்பாற்பட்ட செய்கைகள் நடக்காமல் தடுக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு என்பதோடு மட்டுமில்லாமல், கட்டாய மத மாற்றம் குறித்து பிரச்சாரம் செய்பவர்களை அருகில் உள்ள காவல் நிலையங்கள், அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும்.

ஆப்பிரிக்க, அமெரிக்க மக்கள் மதம்மாறியதால் அவர்களர் தாய் மதம் இன்று இல்லாமல் போய்விட்டது. இயற்கையாக வாழ வேண்டிய அவர்கள் இன்று பல இன்னல் நிறைந்த வாழ்க்கை முறைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.

உதாரணத்திற்கு நாம் இழந்த லெமூரியா கண்டம் மாதிரி.
——————————————————–
ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுபவர்கள், மதம் மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்!’ – அம்பேத்கர்.

அரசியல்வாதிகள் சமூக அக்கறையின்மையே மதமாறுவதற்கும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

( கடவுள்தான் மதங்களை படைத்தார் என்றால் அந்த மதங்களையும் அவரே பாதுகாத்துக்கொள்வார் !
அனைத்து மதங்களுமே அன்பைத் தானே போதிக்கின்றன. மனிதன்தான் அதனை சுயநலத்திற்காக மாசுப்படுத்தி வருகின்றான்.)


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!