In Perambalur District, Electoral Roll Special Summary Revision Camp: Collector Scrutiny!
குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமாந்துறை, லெப்பைக்குடிக்காடு பகுதிகளில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த முகாம்களை கலெக்டர் கற்பகம் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 01.01.2024 என்ற நாளை தகுதி நாளாகக் கொண்டு 09.12.2023 வரை சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையின் சிறப்பு பணியாக வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்தல், நீக்கம் செய்தல், மற்றும் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக 04.11.2023, 05.11.2023, 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தது.
இன்று (26.11.2023) மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,851 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 102 விண்ணப்பங்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 973 விண்ணப்பங்களும் வழங்கப்பட்டுள்ளது.
ஆகமொத்தம் இதுவரை நடைபெற்ற சிறப்பு சுருக்கத்திருத்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க (படிவம் 6) 9,038 விண்ணப்பங்களும், பெயர் நீக்க (படிவம் 7) 691 விண்ணப்பங்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய (படிவம் 8) 6,260 விண்ணப்பங்களும் என 15,989 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.