In Perambalur District, Newcastle disease Vaccination for Chickens : Collector Information!
பெரம்பலூர் மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் 01.02.2024 முதல் 14.02.2024 வரை இருவாரங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசிப்பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே அனைத்து கோழி வளர்ப்போர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டுமென, பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
விளம்பரம்: