அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ), முனுசாமி விடுத்துள்ள தகவல் :
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமகள் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற உள்ளது.
அதன்படி 04.08.16 அன்று ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 09.08.16 அன்று வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 11.08.16 அன்று வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 18.08.16 அன்று பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இந்த மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான (6 முதல் 18 வயதுவரை உள்ள) தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகள் தேவைப்படுவோர், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நன்கு தெரியும்படியான நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தேசிய அடையாள அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், இம்முகாம்களில் முடநீக்கியல் நிபுணர், செவித்திறன் நிபுணர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும், மருத்துவ உதவிகளையும் வழங்க உள்ளனர். எனவே, மாற்றுத் திறனாளிகள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.