In Perambalur district, Patta problems solution camp today: Out of 173 petitions received, immediate solution to 40!

பெரம்பலூர் மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணையவழி தமிழ் நிலம் மென்பொருள் பதிவுகளில் உள்ள எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான கிராம அளவிலான சிறப்பு முகாம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டார்மங்கலம், மாவிலங்கை, செட்டிக்குளம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடையும் வகையில் செட்டிக்குளம் ஆத்திநாட்டார் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை கலெக்டர் வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டார்.

இன்று நடந்த முகாமில், பெரம்பலூர் வட்டத்தில் எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு எளம்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 47 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. வேப்பந்தட்டை வட்டத்தில், மலையாளப்பட்டி, அரும்பாவூர் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு அரும்பாவூர் கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 42 மனுக்கள் பெறப்பட்டு 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. குன்னம் வட்டத்தில் ஒகளுர் (கி), ஒகளுர்(மே), சு.ஆடுதுறை கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு சு.ஆடுதுறை ராஜிவ்காந்தி சேவாகேந்திரியா மையத்தில் நடைபெற்ற முகாமில் 23 மனுக்கள் பெறப்பட்டு 6 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம், மாவிலங்கை, செட்டிக்குளம் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு செட்டிக்குளம் ஆத்திநாட்டார் அன்னதான மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் 61 மனுக்கள் பெறப்பட்டு 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. பட்டா தொடர்பான சிறப்பு முகாமில் 173 மனுக்கள் பெறப்பட்டு, 40 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 133 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!