In Perambalur District Pradosham worship Shiva temples
பெரம்பலூர் மாவட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பனங்கூர் கிராமத்தில் உள்ள காளகஸ்தி சமேத நானாம்பிகை கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.
அரும்பாவூர், எசனை காளதீஸ்வரர், ரேணுகாம்பாள், வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவாலந்துறை சிவன் கோவில், சு.ஆடுதுறை குற்றம் பொறுத்த அபராதரட்சகர், தொண்டைமாந்துறை சிவன் கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவிலில் நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.