In Perambalur district, public demand to stop encroachment of government lands by building temples in the names of trusts and associations!

பெரம்பலூர் மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமாக உள்ள புறம்போக்கு, பஞ்சமி, தரிசு ஓடை மற்றும் மலைபுறம் போக்கு, கல்லாங்குத்து, மேய்க்கால், மந்தவெளி புறம்போக்கு, போன்ற நிலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை சிலர், சாதி மற்றும் சங்கம், அறக்கட்டளை என்ற பெயரில் பதிவு செய்து கொண்டு அரசு புறம்போக்கு நிலங்களில் கோயில் கட்டி வருகின்றனர்.

99 ஆண்டுகள் குத்தைக்கு சிலர் இடங்களை எடுத்திருப்பதாகவும், அதனை எடுத்த நோக்கத்திற்கு பயன்படுத்தாமல், குறுக்கு வழியில் நிலத்தை அவர்களது, அடுத்த தலைமுறைக்கு கிடைக்கும் வகையில் புதிதாக கோயில்களை கட்டுகின்றனர். அதிகாரிகள் பக்தியின் காரமாணக இடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் செய்து வருகின்றனர். மீறி வருபவர்களுக்கு, கோயில் அழைப்பிதழில் சிறப்பு விருந்தினராக பெயரை சேர்த்துக் கொள்கின்றனர். சிறப்பு மாலை மரியாதை, கவனிப்பும், செய்வதால், இதனால், அவர்களும் கண்டும் காணாமல் சென்று விடுகின்றனர்.

பட்டா இடத்தில் கோயில் கட்டவே அனுமதி பெற வேண்டிய நிலையில், புறம்போக்கு நிலங்களில் கோயில் கட்டி விடுவதால், பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த கோயில் புணரமைக்கப்படமலேயே வீணாகிவிடும். மேலும், அந்த இடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது மிக சிரமமாகும்.

எனவே, வருவாய் துறையினர், 99 ஆண்டுகள் குத்தைக்கு பெற்றிருந்தால், அந்த இடத்தின் பிரதான நுழைவு வாயிலில் 99 ஆண்டுகள் என்பது எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை என்ற விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை வைக்க வேண்டும். அதோடு, எந்த நோக்கத்திற்காக அரசு அந்த இடத்தை வழங்கி உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

புதிய புதிய கோயில்களை கட்ட அனுமதிப்பதை விட சீரழிந்த பழைய கோயில்களை தத்தெடுத்து புணரமைத்து சீர் செய்யவும், இல்லை எனில் சொந்த பட்டா இடத்தில் உரிய அனுமதி பெற்று கோயில்களை கட்ட வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலர் ஓடைகளை ஆக்கிரமித்து பள்ளி கட்டிடங்களை கூட கட்டி உள்ளதாகவும், பள்ளியின் சிறப்பு கவனிப்பால் கண்டும் காணமல் இருப்பதாகவும், ஓடை புறம்போக்கிற்கு, பட்டா கேட்டும், இடிக்காமல் இருக்க வருவாய் துறையினரயிடம் போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொழிற்சாலைகளுக்கு தவிர பிற பயன்பாடுகளுக்கு அரசு நிலத்தை 99 ஆண்டுகள் குத்ததைக்கு விடும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!