In Perambalur district schools essay competition on the winning short films presented gifts to students collector.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பபு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறந்த குறும்படங்கள் திரையிட்டுக் காட்டப்பட்டு அவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் அக்குறும்படங்கள் குறித்த ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

perambalur-collector-gift இப்போட்டிகளில் ஒவ்வொரு பள்ளியிலுமிருந்து முதல் 3 மாணவ-மாணவிகளை தலைமையாரியர்கள் தேர்வு செய்து உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அதிலிருந்து வட்டார அளவில் முதல் 3 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவில் 12 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு CHILDREN OF HEAVEN என்ற குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அக்குறும்படங்கள் தொடர்பான கட்டுரைப் போட்டிகள் மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்டது.

அதன்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே.ஹரிஜ்பானு முதலிடத்தையும், எசனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் மதி இரண்டாமிடத்தையும், அயிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் லிமேஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

ஆலத்தூர் ஒன்றியத்தில் கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரா.மகேஸ்வரி முதலிடத்தையும், ராமலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ரா.பிரியா இரண்டாமிடத்தையும், விஜயகோபாலபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் ரா.கோகுல் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

வேப்பூர் ஒன்றியத்தில் கல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி அ.ஆனந்தி முதலிடத்தையும், கிழுமத்தூர் அரசு மாதிரிப் பள்ளி மாணவர் எஸ்.சிவசக்தி இரண்டாமிடத்தையும், ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி பவித்ரா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரெ.லிசா முதலிடத்தையும், தொண்டமாந்துறை நடுநிலைப்பள்ளி மாணவி அ.கலையரசி இரண்டாமிடத்தையும், என்.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ச.சங்கீதா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

இக்கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புத்தகங்களை பரிசாக வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!