In Perambalur District, Second Phase Special Camp for Inclusion of Names in Electoral Roll; Collector Info!

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 01.01.2024 தகுதி நாளாகக் கொண்டு 09.12.2023 வரை சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையின் சிறப்பு பணியாக வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்தல், நீக்கம் செய்தல், மற்றும் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

வாக்காளர்கள் இச்சிறப்பு முகாம்களில் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளலாம். மேலும். இறப்பு மற்றும் நிரந்தரமான இடப்பெயற்சி காரணமாக நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் விவரங்களான பெயர், உறவினர் பெயர், உறவு முறை மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றினை திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக தெரிவித்து அவர்களின் உதவியுடன் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளித்திடலாம்.

இவை தவிர 17 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட முன்பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் 18 வயது பூர்த்தியானவுடன் பெயர் சேர்க்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் குறிப்பாக 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடையும் இளம் வாக்காளர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் இம்முகாம்களை தவறாது பயன்படுத்தி வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!