In Perambalur district, shall be informed immediately if pregnancy allowed for children under the age of 18 – Government orders for hospitals

teen-pregnancy1பெரம்பலூர் : 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மகப்பேறுக்கு அனுமதிக்கப்பட்டால் மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தை நலக்குழுவிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல் சம்பவங்களை தடுக்கவும், சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்தெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது :

18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறுக்கு அனுமதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரம்பலூர் குழந்தை நலக் குழுவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தை தத்துக் கொடுத்தல் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறக் கூடாது. குழந்தை தத்துக்கொடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் இளைஞர் நீதிச்சட்டம் 2015 மற்றும் மத்திய தத்தெடுத்தல் வள ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியே நடைபெற வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தை நலக்குழுவில் ஒப்படைக்கப்பட வேண்டும் அல்லது தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் எண்.164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின்ரோடு, பெரம்பலூர் என்ற முகவரியில் இயங்கும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம் மற்றும் 04328 275020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!