In Perambalur district, starting from tomorrow, the trial program will be available at Empty liquor Bottle! Request to give money at any shop!!

நாளை முதல் பெரம்பலூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் ஒத்திகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் விளை நிலங்கள், பொது இடங்கள் மற்றும் சாலைகளில் காலியாக விட்டுச் செல்வதை தடுக்கும் பொருட்டு, உயர் நீதிமன்ற உத்தரவின்படி நாளை முதல் விற்பனை செய்யப்படும் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் ஒத்திகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10ரூபாய் கொடுத்து மதுபானத்தை பெற்று பின்னர் அதே கடையில் திரும்ப காலி பாட்டிலை ஒப்படைத்து கூடுதலாக கொடுத்த 10ரூபாய் -ஐ திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில், மது அருந்தும் மதுப்பிரியர்கள் அதிகபட்சமாக காலி கண்ணாடி மதுப்புட்டிகளை, மது அருந்தும் பகுதிகளிலேயே விட்டுச் செல்வர். 10 ரூபாய்காக அடுத்த நாள் வாங்கிய கடையிலேயே திரும்ப கொடுப்பது என்பது சாத்தியம் குறைவு, போதை தலைக்கேறிய உடன் அவர் இலக்கை நோக்கி பயனிப்பார். குடித்த பாட்டில்கள் அங்கேயே கிடக்கும். அதை பொறுக்கி பழைய இரும்புக் கடைகளில் போடுபவர்ளே அதிகமாக இருக்கின்றனர். எனவே, வாங்கி கடையில் கொடுத்தால், 10 ரூபாய் என்பதை எந்தக் கடையில் கொடுத்தாலும். காலி பாட்டில்களுக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும், இதனால், பாட்டில்களை மதுக்குடிக்காதவர்களும் கொண்டு வந்து கொடுத்து பணம் பெற்று செல்வர். இதனால், அரசுக்கு எந்த வித நட்டமும் வராது. வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கப் போகிறது. மேலும், பாட்டில்களை பொறுக்கும் வேலை பார்ப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமையும் என்பதால், காலி மது பாட்டில்களை கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு மாவட்டத்தின் எந்த கடையில் கொடுத்தாலும், 10 ருபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!