In Perambalur district, the 18th phase of corona vaccination special camp will be held tomorrow!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் 190 சிறப்பு தடுப்பூசி மையங்களில் 18ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் 08.01.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் 20,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள், 157 மற்ற இடங்கள் என மொத்தம் 190 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் வட்டாரத்தில் 49 தடுப்பூசி மையங்களும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 49 தடுப்பூசி மையங்களும், ஆலத்தூர் வட்டாரத்தில் 41 தடுப்பூசி மையங்களும், குன்னம் வட்டாரத்தில் 51 தடுப்பூசி மையங்களும் என மொத்தம் 190 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் மக்களை ஒருங்கிணைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள் (கோவாக்ஸின்) அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் எனவும், இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு நமது மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!