பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆண்டிக்குரும்பலூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து (வயது – 32) இவரது மனைவி தனலட்சுமி (30) மருதமுத்து இரண்டு கால்களும் செயல் இழந்தவர் இதனால் எந்த வேலைக்கும் பேகமுடியாமல் விட்டிலே இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு மாலினி, மனேஜ், மதுமிதா, என்று முன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொள்வார்களாம் இதே போல், கடந்த 22ம் தேதி கணவன் மனைவிக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த தனலட்சுமி வீட்டில் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அவரை உடனே சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த தனலெட்சுமி இன்று காலை சிகிச்சையின் போது இறந்தார்.
இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.