In Perambalur fencing the day after tomorrow is the launch event.
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் இராமசுப்பிரமணியராஜா விடுத்துள்ள தகவல்:
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான பெரம்பலூர் மாவட்ட அளவிலான போட்டிகளான கைப்பந்து, ஜுடோ, வாள்சண்டை, பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ, டேக்வாண்டோ, நீச்சல், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுப் போட்டிகள் 21.11.2016 அன்றும், இருபாலருக்குமான தடகளம், கடற்கரை கையுந்துப்பந்து, ஆகிய போட்டிகள்; 22.11.2016 அன்றும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டில் தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டு தவிர அனைத்து விளையாட்டுகளும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் வாள்சண்டை விளையாட்டை பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெரம்பலூர் வாள்சண்டை கழகம் இணைந்து (பென்சிங்) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வாள்சண்டை பயிற்சியாளர் மற்றும் தேசிய வாள்சண்டை வீரர், வீராங்கனைகளுடன் விளையாட்டு நுணுக்கங்கள் பற்றிய செய்முறை விளக்கம் வேப்பூர், பாடாலூர் மற்றும் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வரும் நவ.18. அன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
எனவே, வாள்சண்டை விளையாட்டு செய்முறை விளக்க விழாவில் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என கேடடுக்கொண்டுள்ளார்.