In Perambalur, free training on cow care, vermicomposting!
பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கறவைமாடுகள் பராமரித்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி இலவசமாக வரும் 17.04.2023ஆம்தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் இப்பயிற்சியில் கறவைமாடுகள் மற்றும் இனங்கள் ,கொட்டகை அமைப்பு ,கன்று பராமரிப்பு,தீவன மேலாண்மை ,நோய்கள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் ,தடுப்பூசி அட்டவணை,மூலிகை மருத்துவம்,மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்தல்,தரமான பால் உற்பத்தி மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பற்றி கால்நடை பயிற்சி மைய பேராசிரியர்களால் விரிவாக பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது.
பயிற்சியின் கால அளவு 10 நாட்கள் பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப்பயிற்சியில்சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்கதெரிந்தசுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை. வங்கி கணக்கு புத்தகம், உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் பான்கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஏப்ரல்13 ஆம் தேதி நடக்கவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.