In Perambalur, gold jewelery was snatched from a woman who was walking!
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு மனைவி மலர்விழி (42), அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணியாளராக உள்ளார். பணிமுடித்த அவர், இன்று மாலை சுமார் 3 மணி அளவில், அரணாரை அங்கன்வாடியில் பணிபுரியும் சாந்தி என்பவருடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு, தந்தை ரோவர் மெட்ரிக் பின்புறம் உள்ள ஏ.இ.ஓ அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மலர்விழி அணிந்திருந்த தாலிச்செயின் 2.5 பவுனை பறித்து சென்றனர்.
உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில்உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.