In Perambalur, he married 25 groom couples at his own expense by DMK Deputy General Secretary A. Raja. MP!
கலைஞரின் 100 ஆண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கி திருமணம் செய்து வைத்தார் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. தனியார் திருமண மண்டபத்தில் சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: ,
திருநங்கைகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலையில், ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமத்துவம் வர வேண்டும் என்பதற்காக திட்டங்கள் கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. “ஜெய்பீம் ‘ சினிமா பார்த்துவிட்டு அந்த படத்தில் வரும் காட்சிகளில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்று குறைகளை தீர்த்து வைக்கிறார். வேலைவாய்ப்பு,பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.
நரிக்குறவர்கள் மக்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், வரும் காலங்களில் நரிக்குறவ மக்கள் தி.மு.க.விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இர.ப.பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன்,
ந.ஜெகதீஷ்வரன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, ம.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், முன்னாள் வேப்பூர் சேர்மன் அழகு.நீலமேகம்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், .பிரபாகரன்,ஆர்.அருண், தொ.மு.ச.பேரவை மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் ரகமத்துல்லா, நல்லுசாமி, சித்தார்த், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் பா.ரினோபாஸ்டின், கிருஷ்ணாஇள, ராகவி ரவிக்குமார்,தமிழ்வேந்தன், அ.இளையராஜா, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் கோபி கிருஷ்ணா, மற்றும்
நரிக்குறவர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மலையப்ப நகர் ஆர்.சிவக்குமார், எறையூர் பகுதி நரிக்குறவர்கள் நம்பியார், பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழங்குடியினர் மாநில தலைவர் அதியமான் நன்றி கூறினார்.