In #Perambalur heard four days in the luxury car is parked sensation: police investigation
பெரம்பலூரில் நான்கு நாட்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கார் : போலீசார் விசாரணை
பெரம்பலூரில் ரோவர் ஆர்ச் பகுதியிலிருந்து விளாமுத்தூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் முன்பகுதியில் TN 46 J 8093 என்ற பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருக்கிறது
இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள், வியாபாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் கார் யாருடையது என விசாரித்தும் தகவல் தெரியாதால் சந்தேகமடைந்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை ஆய்வு மேற்கொண்டு, கடந்த 5 நாட்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருக்கும் இந்த கார் யாருக்கு சொந்தமானது? காரை எதற்காக இப்பகுதியில் நிறுத்தி விட்டு சென்றார்? காரின் உரிமையாளர் கடத்தப்பட்டரா? குற்ற சம்பவங்களில் தொடர்புடையவரா? வாகன பதிவு எண் உண்மையானது தானா? அல்லது வெடிகுண்டு வைத்து அசம்பாவிதம் நிகழ்ந்த நிறுத்தப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேட்பாரற்று கடந்த 5 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த காரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.