In Perambalur in a clash near the private college buses with more than 20 students injured

பெரம்பலூர் அருகே நின்று கொண்டிருந்த தனியார் கல்லூரி மீது மற்றொரு தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் இருந்து தினமும் தனலட்சுமிசீனிவாசன் மகளிர் கல்லூரியை பேருந்து அக்கல்லூரி மாணவர்களை ஏற்றி சென்று திரும்ப கொண்டுவிடுவதும் வழக்கம். அதே போல் பெரம்பலூர் ரோவர் கலைக்கல்லூரி (இருபாலர்) சேர்ந்த பேருந்தும் தினமும் கல்லூரி மாணவர்களை ஏற்றி சென்று திரும்ப கொண்டு வந்து விடுவது வழக்கம்.

இன்று காலை கல்லூரி மாணவர்களை ஏற்றி இறக்கி செல்வதில் தினமும் இரு பேருந்து போட்டி போட்டு தறி கெட்ட குதிரைகளாய் வருவது வந்துள்ளது. இந்நிலையில் ரோவர் கல்லூரி பேருந்து கவுள்பாளையம் அருமடல் பிரிவு சாலை அருகே மாணவர்களை ஏற்ற ஒதுங்கிய போது பின்னால் வேகமாக வந்த தனலட்சுமிசீனிவாசன் மகளிர் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் காயமடைந்து அலறினர்.

இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் காயமடைந்த மாணவ -மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று நேற்று சோமண்டாபுதூர் அருகே பெரம்பலூரைச் சேர்ந்த ராமக்கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பேருந்தின் பின்பக்க 3 டயர்கள் ஒரே நேரத்தில் வெடித்தது. இதில் ஓட்டுனரின் சமார்த்தியத்தால் பேருந்து அருகே உள்ள பெரும் பள்ளத்தில கவிழ்வது தடுக்கபட்டு விபத்தில் இருந்து மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தனியார் கல்லூரிகள் கண்காணிக்படுவதுடன் முறையாக பராமரிக்க செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!