In Perambalur incentive valankatat near the turnpike or toll charge and opened the doors. Motorists joy
ttpl-staff-protest-for-bonus ttpl-toll-free

பெரம்பலூர் அருகே உள்ள திருமாந்துறை சுங்கச் சாவடி ஊழியர்கள் தீபாவளி ஊக்கத்தொகை வழங்க கோரியும், மத்திய அரசு நிர்ணியித்தப்படி 72 நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கோரியும் சுங்கச் சாவடி நிர்வாகத்திற்கு பல கோரிக்கை வைத்து இருந்தனர். நிர்வகம் முறையான பேச்சு வார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனை கண்டித்து இன்று காலை முதல் வசூலித்த சுங்கப் பணத்தை சுங்கச் சாவடி நிர்வாகத்திடம் வழங்காமல் முடக்கி வைத்த கொண்டனர். மேலும், சாலையில் வந்த வாகனங்களுக்கு கட்டணங்களை வசூலிக்காமல், கதவுகளை திறந்து விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் சுங்கச் சாவடியை கடந்து சென்றனர்.

இது குறித்து ஏ.ஐ.டி.யூ.சி தொழிற் சங்க செயலாளர் விஜயகுமார் தெரிவித்தாவது; சுங்கச் சாவடி நிர்வாகம் முறையாக ஊக்கத் தொகைகுறித்து அறிவிப்பு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதனால், சுங்கச் சாவடி நிர்வாகத்திற்கு உள்ளேயே தங்கி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!