பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில் எதிர்வரும் வேளாண் பருவத்தில் மக்காசோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்குத் தேவையான உரங்கள் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மண்பரிசோதனை முடிவு அறிக்கைபடி தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
உரங்களின் விற்பனை விலை விவரம் :
தற்சமயம் 50 கிலோ எடை கொண்ட உர மூட்டைகளின் விலையானது, வேம்பு கலந்த யூரியா ரூ.284 -, ஸ்பிக் டிஏபி ரூ.1150-, ஐபிஎல் டிஏபி ரூ.1085-, எம்சிஎப் டிஏபி ரூ.1191-, கிரிப்கோ டிஏபி ரூ.1100-, இப்கோ டிஏபி ரூ.1100-, ஆர்.சி.எப் டிஏபி ரூ.1100- பாக்டம்பாஸ் ரூ.889-, துத்தநாகம் கலந்த பாக்டம்பாஸ் ரூ.914-, ஐபிஎல் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் ரூ.855-, கொரமண்டல் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் ரூ.875-, எம்.சி.எப் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் ரூ.866-, இப்கோ 20:20:0:13 காம்ப்ளக்ஸ் ரூ.825-, ஆர்சிஎப் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் ரூ.857-, விஜய் 17:17:17 காம்ப்ளக்ஸ் ரூ.1102-, இப்கோ 10:26:26 காம்ப்ளக்ஸ் ரூ.1030-, கொரமண்டல் 16:20 காம்ப்ளக்ஸ் ரூ830-, ஐபில் 15:15:15 காம்பளக்ஸ் ரூ.840-, ஐபில் 16:16:16 காம்ப்ளக்ஸ் ரூ.850-,ஆர்சிஎப் 15:15:15 ரூ.878-, ஐபிஎல் பொட்டாஷ் ரூ.550-, எம்சிஎப் பொட்டாஷ் ரூ.550-, ஆர்சிஎப் பொட்டாஷ் ரூ.550-, கோத்தாரி சூப்பர் ரூ.367-, கிரீன்ஸ்டார் சூப்பர் ரூ.362- ஆகிய விலைக்கு விற்கப்படுகின்றது.
உர வியாபாரிகள் தங்களது கடைகளில் உரங்களுக்கான விலைப் பட்டியல் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் உரங்களை அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட அதிகமாக விற்கக் கூடாது, விவசாயிகள் வாங்கும் உரங்களுக்கான உரிய ரசீது வழங்கப்பட வேண்டும் இதனை மீறுவோர் மீது உரக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1985-ன் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.