In Perambalur, Ka.Kannapiran the president of the Lake Water Users Association, the removal of encroachments from the lake and water supply channel, a request to Collector

பெரம்பலூர் மேலேரி மற்றும், கீழேரி, துறைமங்கலம், அரணாரை, செஞ்சேரி, குரும்பலூர் ஏரிகள் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் கா.கண்ணபிரான் கலெக்டர் கற்பகத்திடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மேலேரி, பெரம்பலூர் கீழேரி மற்றும் துறைமங்கலம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் வரத்து வாரியில் உள்ள ஆக்கிரமிப்பையும், அரணாரை ஏரியில் உள்ள கருவை மரங்களை வனத்துறையின் கீழ் அகற்ற வேண்டும், பெரம்பலூர் மேலேரியில் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கு பகுதியில் நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பும், பெரம்பலூர் கீழேரியில் நீர்வரத்து வாய்க்கால், பெரம்பலூர் முதல் விளாமுத்தூர் சாலை மற்றும் கடக்கால் கிழக்கே நீர்வடி பகுதி வரையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியானது, மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், கேந்திர வித்தியாலயா, கோல்டன் கேட்ஸ், ஜோசப் மற்றும் ரோவர் பள்ளிகளுக்கு குழந்தைகள், பெற்றோர்கள், பணியாளர்கள் மற்றும் சிறுவாச்சூர், விளாமுத்தூர், நொச்சியம் போன்ற பிற ஊர்களுக்கு சென்று வருபவர்களுக்கு முக்கிய சாலையாகவும், கோவில் திருவிழா காலங்களில் தேர் வரும் பாதையும், நாள் ஒன்றுக்கு, சுமார் 5 ஆயிரம் பேர்கள் பயணிக்க கூடிய சாலையாகவும் உள்ளது.

துறைமங்கலம் ஏரிக்கு வரக்கூடிய வரத்து வாய்க்கால் நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனைக்கு வடபுறம் உள்ள பகுதி, வருவாய்த்துறை மூலமாக நத்தம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டு காலமாக ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து வாய்க்கால், அது கடந்த 1987ல், 1987 ல் திருச்சிராப்பள்ளி மாவட்டமாக இருந்த போது, பெரம்பலூர் வட்டாட்சியர் மூலமாக நெஞ்சாலைத்துறை. பொதுப்பணித்துறை மற்றும் பேரூராட்சி மூலமாக காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

தற்போது, அப்பகுதியில் குடியிருப்பவர்கள் அரசாங்கத்தால் உடமைப்பெற்ற சான்று இருக்கிறது. மரபட்டா வாங்கி உள்ளோம், அரசாங்க அனுமதி பெற்றுள்ளோம். என்றும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் பொய்யான தகவல்களை கூறியும், நடவடிக்கை எடுக்க வரும் அரசு அதிகாரிகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுப்போம் என்றும் மிரட்டி வருவதாக தெரிய வருகிறது.

ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏரி, குளம், வரத்து வாய்க்கால், கால்வாய் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மேற்கண்ட ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களின் முறையீடுகள் யாவும் சட்ட நடைமுறைக்கு பொருந்தாது என்பதை (தாங்கள்) கலெக்டர் உறுதிப்படுத்தி மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக அதிகாரிகளுக்கு உத்திரவிட்டு விவாசாயிகளின் நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாத்து, விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!