In Perambalur, Kedara Gauri Puja

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருமாள்-தாயாருக்கு சிறப்பு வழிபாடும், தாயார்சன்னதியில் ஐப்பசிஅமாவாசையை ஒட்டி கேதார கவுரி பூஜையும் நடந்தது. இதில் திரளான கலந்துகொண்டு வழிபட்டனர்.

இமயமலைச்சாரலில் உள்ள கேதாரம் சிவபெருமாள் உறைவிடம் ஆகும்.சக்தி ரூபமான பார்வதி சிவனை நினைத்து 21 நாட்கள் விரதம் (உபவாசம்) இருந்து சிவனின் மற்றொரு பாதியாக (உமையொருபாகனாக) ஐக்கியமானார்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசைக்கு முன்னதாக விரதம் இருந்து அமாவாசை தினத்தில் விரதத்தை நிறைவு செய்து அம்பாளை பூஜை செய்தால் சிவசக்தி அருளால் வீட்டில் சகல சவுபாக்கியங்கள் பெருகும். கணவன்-மனைவி இடையேயும், குடும்பத்திலும் நல்லுறவு மேம்படும் என்பது ஐதீகம் ஆகும்.
பெரம்பலூரில் ஆண்டுதோறும் தீபாவளி அமாவாசை அன்று மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் தாயார் சன்னதியில் கேதார் கவுரி விரதபூஜை நடந்துவருகிறது.

நேற்று முன்தினம் கேதார் கவுரி பூஜை விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு அம்பாள் சிலை அக்ரகாரத்தில் உள்ள கோவில் பரம்பரை ஸ்தானீகர் நாராயணன் அய்யர்இல்லத்தில் அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து மரகதவல்லித்தாயார் சன்னதிக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு கலசம் ஆவாகனம் செய்யப்பட்டு, வினாயகர் பூஜை, அஷ்டோத்திரபூஜை நடைபெற்றது. கேதாரகவுரிபூஜையின் மகத்துவம் குறித்து பக்தர்களுக்கு விளக்கப்பட்டது. பூஜையை மணிகண்டன் அய்யர் மற்றும் ரகுராமன் குழுவினர் நடத்திவைத்தனர்.

கேதார் கவுரிபூஜையில் பெண்கள் கூட்டத்தை தவிர்க்க 4 பாட்சுகளாக பூஜை நடைபெற்றது. 400-க்கும் மேற்பட்ட திரளான பெண்கள் கலந்துகொண்டு தேங்காய், பழம் நிவேதனம் செய்து அம்பாளை வழிபட்டனர். பூஜையின்போது மஞ்சள் சரடு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதனை பெண்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச்சென்று வலது கையில் அணிந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!