In Perambalur Krishna Jayanti celebration in Golden Gates School
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் இன்று கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணர் பிறந்த நாள் (ஜெயந்தி) முன்னிட்டு அப் பள்ளி மாணவ மாணவிகள் கிருஷ்ணர் ராதை போன்று பல்வேறு வேடமிட்டு வந்தனா. அவர்கள், கிருஷ்ணனை பற்றிய நாடகங்கள், கவிதைகள், நடனங்கள் நிகழ்த்தினர்.
மாற்று மதங்களை சேர்ந்த மாணவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்து பார்வையாளர்களை அசத்தினர். மேலும் பள்ளி மாணவர்கள் பகவான் கிருஷ்ணனின் கீதா உபதேசம், அவதாரம் குறித்தும் விளக்கினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த மழலைகளை பள்ளி தாளாளார் ரவிச்சந்திரன், முதல்வர் அங்கையர்கன்னி, ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆசிரியர்கள் கோமதி உள்பட வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.