In Perambalur kunnam kuruvatta contests and winning teams, can play a part in the education of the district-level competitions

sportzமாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பாக பெரம்பலூர் மற்றும் குன்னம் குறு வட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான குழுப்போட்டிகளும், தடகள போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

14.10.2016 அன்று புதிய விளையாட்டுகளான டென்னிகாய்ட், கேரம், கடற்கரை கையுந்து பந்து, சாலையோர மிதி வண்டி போட்டிகளும், முதன்மை விளையாட்டுப்போட்டி பிரிவில் 18.10.2016 அன்று கால்பந்து, பூப்பந்து, கையுந்துபந்து, கோகோ, கபாடி, மேசைபந்து உள்ளிட்ட போட்டிகளும், 25.10.2016 அன்று ஹாக்கி, டென்னிஸ், எறிபந்து, கைபந்து, கூடைபந்து, இறகுபந்து, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகளும் நடத்தபடஉள்ளது.

20.10.2016 மற்றும் 21.10.2016 ஆகிய தினங்களில் தடகள போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இதில் 14 வயதிறுகுட்பட்டோர் பிரிவின் கீழ் 100மீ, 200மீ 400மீ, 800மீ தடகளப் போட்டிகளும், தடை தாண்டி ஒடுதல் நீளம் தாண்டுதல், உயரம் தண்டுதல் குண்டு எறிதல், வட்டு எறிதல் 4 x 100 மீ தொடர் ஓட்டமும்,

17 வயதிற்குட்பட்ட மாணவ,மாணவியருக்கான தடகளப் போட்டிகள் பிரிவில் 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 3000மீ (இருபாலருக்கும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது) 100மீ தடை ஓட்டம், உயரம் தாண்டுதவல், கோலூண்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் 4 x100மீ தொடர் ஓட்டமும் நடைபெற உள்ளது.

19 வயதிற்குட்பட்ட மாணவஃ மாணவியருக்கான தடகளப் போட்டிகள் பிரிவில் 100மீ, 200மீ, 400மீ 1500மீ, 3000மீ, 5000மீ தடை ஓட்டம் (மாணவியருக்கு 100மீ மற்றும் மாணவருக்கு110மீ) 400மீ தடை ஓட்டம் உயரம் தாண்டுதல், கோலூண்றி தாண்டுதல் , நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டீ எறிதல் 4 x 100மீ தொடா; ஓட்டம், 4 x 400மீ தொடH ஓட்டப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

மேற்காணும்போட்டிகளில், பெரம்பலூர் மற்றும் குன்னம் குறுவட்ட போட்டிளில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரை 9688514464 மற்றும் 8608479293 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!