In Perambalur, land survey officers protested to fill vacant posts!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உமாச்சந்திரன் தலைமை வகித்தார்.
இதில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும், நவீன மறு நிலஅளவை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியறுத்தி வரும் 8ம்தேதி மாவட்ட அளவில் தர்ணா போராட்டமும், வரும் பிப் 23ம்தேதி மண்டல அளவில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் நில அளவையர்கள் பலர் கலந்துகொண்டனர்.