In Perambalur Lodge, 2 people, including one who stayed with a minor girl, were arrested under the POCSO Act!
பெரம்பலூரில் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, போலீசார் நகரில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நகரம் முழுவதும் சோதனை நடத்தினர்.
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் சோதனையிட்ட போது, மைனர் பெண் ஒருவர் வாலிபருடன் தங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் வெங்கடேஷ் (23) ஆட்டோ டிரைவரான இவரும், மைனரான பெண்ணான கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வெங்கடேசனையும், மைனர் பெண் என்று தெரிந்திருந்தும் ரூம் கொடுத்ததால், லாட்ஜ் மேனேஜர் மாதவன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில், சேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். போலீசார் மைனர் பெண்ணை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.