In Perambalur, miscreants snatched a gold chain from a woman who was standing outside her house!

கற்பனை காட்சி
பெரம்பலூர் 19வது வார்டு சங்குப் பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் இருக்கு இரு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி செல்வமணி (55) 2வது மனைவி ஜோதிமணி (50), விவசாயம் செய்து வருகிறார். இன்று இரவு 8.30 மணி அளவில், செல்வமணி வீட்டின் வெளியே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர், செல்வமணியை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயின், சுமார் 8 3/4 பவுனை பறித்து சென்று மின்னல் வேகத்தில் மறைந்தனர். இதில் செல்வமணி கழுத்தின் இடது புறத்தில் லேசான ரத்தக் காயம் ஏற்பட்டது.
இது குறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், மர்ம நபர்களை அடையாளம் பணியில் ஈடுபட்டுள்ளனர்.