In Perambalur, more than 100 youth from the Other party joined the AIADMK in the presence of RT Ramachandran.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தளி ,எழும்பூர், பேரளி, வெண்மணி ,அந்தியூர் ஆகிய ஊர்களில் இருந்து விசிக, திமுக, அமமுக, ஐஜேக, ஆகிய கட்சிகள் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெரம்பலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி. இராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏவும், மாவட்ட பொருளாளருமான பூவை.செழியன், காடூர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.