தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தாய்மார்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்திடவும், பிறந்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுப்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவர 24 ம் நாளை தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரித்து வரப்படுகிறது.
அதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு தமிழக முதலமைச்சரால் துவங்கப்பட்ட சிறப்பு திட்டமான தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகத்துடன் சிறப்பு பரிசுகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் ச..மீனாட்சி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இணைஇயக்குநர் மரு.உதயக்குமார், நகராட்சித் தலைவர் சி.இரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.