In Perambalur, National Paralympic Volleyball Tournament: Karnataka Team First!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாராவாலிபால் சங்கம், மாவட்ட வாலிபால் சங்கம், ஈரோடு உணர்வுகள் டிரஸ்ட ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சேம்பியன்ஷிப் -2023 போட்டி 2 நாட்கள் நடந்தது. அதற்கு, தேசியபாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், மாநிலதலைவர் மக்கள்ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆல்மைட்டி பள்ளி தாளாளர் முனைவர் ஆ.ராம்குமார் முன்னதாக வரவேற்றார்.
முதல் நாள் போட்டியை டி.ஆர்.ஓ நா.அங்கயற்கன்னி தொடங்கி வைத்தார். இதில் ஜார்கண்ட், ராஜஸ்தான், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஹிரியானா, இமாச்சலபிரதேசம், தெலுங்கனா உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.. இதில் ஆண்கள் பாராவாலி போட்டியில் கர்நாடகா அணி முதல் இடத்தையும், ராஜஸ்தான் அணி 2ஆம் இடத்தையும், தமிழ்நாடு 3ஆம் இடத்தையும், ஹிரியானா, 4ஆம் இடமும் பெற்றன.
பெண்கள் பாராவாலி போட்டியில் ராஜஸ்தான் அணி முதலிடத்தையும், ஜார்கண்ட அணி 2ஆம் இடத்தையும், , கர்நாடகா 3ஆம் இடத்தையும், ஹரியானா, 4ஆம் இடத்ததை பெற்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் கேடயங்களும் ஐஓபி பெரம்பலூர் கிளை, அஸ்வின்ஸ் குழுமம், அகரம்சிகூர் வெற்றி உயர்நிலைப்பள்ளி, சிங்கை டெக்ஸ்டைல்ஸ் பேலஸ் பிரைவேட் லிமிடெட் பெரம்பலூர், ஆதவ் பப்ளிக் ஸ்கூல், அற்புதா மருத்துவமணை, லிட்டில் சூப்பர் ஸ்டார், அகாடமிக் ஆகிய நிறுவனங்கள் உதவியுடன் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் ஆர்.டி.ஓ நிறைமதி, தமிழ்நாடு பாராவாலி சங்க துணைசெயலாளர்கள் ஜெயபிரபா, கண்ணன், மாநில நடுவர்குழு தலைவர் ஜாபர், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், பாராவாலி பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ரஞ்சித்குமரன், செயலாளர்; இளங்கோவன், பொருளாளர் சீனீவாசன் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், வழக்கறிஞர் கோவிந்தராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டிகான ஏற்பாடுகளை ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி துணைத் தலைவர் சி.மோகனசுந்தரம், செயலாளர் சிவக்குமார், சங்கீதா கோபிநாத், பள்ளி முதல்வர்கள் ஹேமா, சந்திரோதயம், மற்றும் ஆசிரியர்கள் உள்பட பார்வையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.