பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலனால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த அய்யாவு. இவரது இளைய மகள் கனிமொழி(18) ,இவர் திருச்சியிலுள்ள டி.ஆர்.பி (எஸ்.ஆர்.எம்) பொறியியல் கல்லூரியில் பி.இ.,சிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இதனிடையே கனிமொழியை கடந்த ஒரு வருடமாக அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ்(26) என்பவர் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து பெரம்பலூர் திரும்பிய கனிமொழியை புதிய பஸ்நிலையத்திலிருந்து பிரகாஷ் தனது டூவீலரில் அழைத்துகொண்டு அவர் குத்தகைக்கு பார்த்து வரும் வேப்பந்தட்டை வட்டம் தொண்டாமாந்துறை அருகே உள்ள விஜயபுரம் கிராமத்திலுள்ள வயலில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை செல்போன் மூலம் கனிமொழி குடும்பத்தாரை தொடர்பு கொண்ட பிரகாஷ் உங்களது மகள் கனிமொழியை கொன்றுவிட்டேன். நானும் செத்து விடுவேன் என்று கூறி விட்டுபோனை துண்டித்து விட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த கனிமொழி குடும்பத்தார்.அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கனிமொழி கொடுரமாக அடித்து கொலை செய்யப்பட்டுகிடந்தது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து கனிமொழியின் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனக்காகபெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவான பிரகாசையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலனால் கொடுரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.