In Perambalur near the fire smoke inhalation after the death of the elderly woman
பெரம்பலூர் அருகே தீ விபத்து : புகைமூட்டத்தால் மூதாட்டி சாவு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் மனைவி அஞ்சலை(வயது – 70), இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டின் அருகே உள்ள மாட்டுத் தொழுவத்தில் கட்டிலில் தூங்கி கொண்டு இருந்தார்.
இந்நிலையில் வெளிச்சத்திற்காக வைத்திருந்த விளக்கு தவிடு மற்றும் சோளக்கதிர் மூட்டைகளின் மீது சாய்ந்து ஏற்பட்ட தீயால், புகை மூட்டம் சூழ்ந்து மூதாட்டி அஞ்சலை மூச்சு திணறி உயிரிழந்தார். மேலும் தீ மாட்டு கொட்டகை முழுவதும் பரவியதால் மூதாட்டி அஞ்சலையின் உடல் 50 சதவீதத்திற்கு மேல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனிடையே நேற்று அதிகாலை அஞ்சலை இறந்து கிடந்தது அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அஞ்சலையின் மகன் முருகேசன்(45) அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.,குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.