In Perambalur on behalf of the demonstration demanding the TMC
பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், முல்லைப் பெரியாறு, மேகதூது அணை மற்றும் மீனவர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பபலூர் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே தமாகா சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் கிருஷ்ணஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். கட்சி பிரமுகர் பலர் கலந்து கொண்டனர்.