In Perambalur on behalf of the School Education Department quiz for school students, speech contests
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு மாதமும், பள்ளிகள் அளவில் பேச்சுப் போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வாகும் மாணவ மாணவிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அளவிலும், அதன்பிறகு மாவட்ட அளவிலுமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் அக்டோபர் மாதத்திற்கான போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று நடைபெற்றது. வினாடி வினா போட்டி வருவாய் கோட்டாட்சியர் கூட்ட அரங்கிலும், பேச்சுப் போட்டி பெரம்பலூர் வட்டார வள மையத்திலும் நடைபெற்றது.
தமிழ் பேச்சு போட்டியில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சத்தியா முதலிடத்தையும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியை சேர்ந்த சினேகா இரண்டாம் இடத்தையும், சத்திரமணை அரசு உயர் நிலைப்பள்ளியை சேர்ந்த கனிமொழி மூன்றாமிடத்தையும்,
ஆங்கில பேச்சு போட்டியில் பெரம்பலூர் தோமனிக் பெண்கள் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த தபித்தால் முதலிடத்தையும், வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த செல்வமணி இரண்டாமிடத்தையும், அனுக்கூர்அரசு மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த லாவண்யா மூன்ற்மிடத்தையும் பெற்றனர்.
இப்போட்டியில் தேர்வு பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார், வரும் திங்கள் கிழமை (நவ.7.) அன்று பரிசுகளை வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத் உதவி திட்ட அலுவலர் பாஸ்கர், ஆசிரியர் பயிற்றுநர்கள், அனுராதா, நவநீதசோழன், சேகர், பன்னீர்செல்வம், பிரேமாவதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கதிஜாபீ, மணிவண்ணன், சிவசிதம்பரம் மற்றும் விஜயலெட்சுமி, சரவணன், பாரதிதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.