In Perambalur, on behalf of the Tamil Nadu Farmers’ Association, a tribute to the farmers’ leader C. Narayanasamy Naidu!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத் திலுள்ள உழவர் பெருந்தலைவர் சி.நாரயணசாமியின் 39 வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. அதில், உழவர் பெருந்தலைவரின் நினைவைப் போற்றும் வகையில் மாநில செயலாளர் ஆர். ராஜா சிதம்பரம் பேசினார்.
அதனை தொடர்ந்து முதலாவதாக கூட்டத்தில் உழவர் பெருந்தலைவரின் நினைவை போற்றும் வகையில் 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் உழவர் உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் நீலகண்டன் மாலை அணிவித்தார், விவசாயிகள் அனைவரும் சிலை முன்பு மலரஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் வட்டார, கிளை சங்க பொறுப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.